'ஐயிட்டம்' விரும்பும் மல்லிகா!

வழக்ககாக குத்தாட்டம் ஆடுவோருக்கு கதாநாயகியாக ஒரு படத்திலாவது நடிக்க மாட்டோமோ என்ற ஆதங்கம் இருக்கும். ஆனால் டெல்லி அழகி மல்லிகா கபூர் தலைகீழாக இருக்கிறார்.
ஹீரோயினாக நடிப்பதை விட ஐட்டம் பாட்டுக்கு ஆடுவதுதான் தனக்கு விருப்பமாக இருப்பதாக தெரிவிக்கிறார் மல்லிகா. அத்தோடு நில்லாமல் தன்னை வைத்து ஒரு குத்துப் பாட்டு எடுங்களேன் என்று தயாரிப்பாளர்களிடம் அன்போடு கேட்டு வருகிறாராம்.
அந்தோணி யார் பட செட்டில் மல்லிகாவை சந்தித்தபோது, ஹீரோயினாக, டூயட் பாடிக் கொண்டு, அழகுப் பதுமையாக வந்து போவது போரடிக்கிறது (ஆத்தா நடிச்சது நாலே படங்கள்தான்!).
எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஐட்டம் பாட்டுக்கு ஆடுவதுதான் விருப்பமானது. ஆனால் ஹீரோயின் வாய்ப்பாகத்தான் வந்தது. இதனால்தான் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பிற நாயகிகளின் படங்களில் குத்துப் பாட்டுக்கு ஆடத்தான் எனக்குப் பிடிக்கிறது என்கிறார்.
அந்தோணி யார் படத்தில் மீனவப் பெண்ணாக வருகிறாராம் மல்லிகா கபூர். இதுதவிர கங்கா காவிரி என்ற ஒரு படமும் இருக்கிறதாம்.
கையில் ஹீரோயின் வாய்ப்பு இல்லாததால்தான் இப்படியெல்லாம் பேச ஆரம்பித்துள்ளார் மல்லிகா என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











