மலையாளத்தில் மல்லிகா கபூர்

மலையாளத்தில் வினயன் இயக்கத்தில் உருவான அற்புதத் தீவு படம் மூலம் நடிகையாக மலையாளத்தில் அறிமுகமானவர் மல்லிகா கபூர். இப்படத்தைத் தொடர்ந்து தமிழிலும் தனது சேவையை விரிவுபடுத்தினார், கிளாமரிலும் கலக்கினார்.
இந்த நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கப் போகிறார் மல்லிகா கபூர். மோகன்லாலுடன், மாடம்பி என்ற படத்தில் 2வது நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மல்லிகா. காவ்யா மாதவன் நாயகியாக படத்தில் இடம் பெற்றுள்ளார்.
படத்தில் முதலில் பாமாதான் இரண்டாவது நாயகியாக நடிக்கவிருந்தார். ஆனால் அவருக்கு கோலிவுட்டில் சூப்பர் வாய்ப்பு தேடி வந்ததால் இப்படத்ைத லூசில் விட்டு விட்டார். இதையடுத்து 2வது நாயகி வாய்ப்பு மல்லிகாவைத் தேடி வந்தது.
மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் மல்லிகாவுக்கு இதுவரை பெரிய பிரேக் கிடைக்கவில்லை. இதனால் அவரது மார்க்கெட் இந்தியாவின் பண வீக்கம் போல ஏறியும், இறங்கியும் காணப்படுகிறது.
தமிழிலும், தெலுங்கிலும் போதிய அளவுக்கு கிளாமர் காட்டியும் கூட அவருக்கு இதுவரை நிலையான மார்க்கெட் அமையவில்லை.
இந்த நிலையில் தன்னைத் தேடி வந்துள்ள மலையாள வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு முத்திரை பதிக்க ஆர்வமாக உள்ளாராம் மல்லிகா.


Click it and Unblock the Notifications











