'செக்ஸ்' ஓ.கே. - 'கிஸ்' வேண்டாம்!

By Staff

Mallika Sherawat
ஹிஸ் என்ற இந்திப் படத்தில் கிட்டத்தட்ட பல காட்சிகளில் நிர்வாண கோலத்தில் நடித்துள்ளாராம் மல்லிகா ஷெராவத். ஆனால் இயக்குநர் பலமுறை வற்புறுத்தியும் முத்தக் காட்சியில் நடிக்க மறுத்து விட்டாராம்.

ஜெனீபர் லின்ச் இயக்கி வரும் படம்தான் ஹிஸ் (Hisss). முத்தக் காட்சியில் நடிப்பதற்கு சற்றும் சளைக்காதவர் மல்லிகா. மர்டர் படத்தில் இம்ரான் ஹஷ்மிக்கு அவர் கொடுத்த முத்தம் இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு அகலவில்லை. அதேபோல க்வாஹிஷ் படத்திலும் முத்தக் காட்சியில் பயமுறுத்தியிருந்தார்.

ஆனால், ஹிஸ் படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க மிக மிக தயங்கினாராம், கடைசி வரை நடிக்கவே இல்லையாம்.

ஹிஸ் படத்தில் கவர்ச்சிகரமான பாம்பு கேரக்டரில் வருகிறாராம் மல்லிகா. படத்துக்காக படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம். சில காட்சிகளில் நிர்வாண கோலத்தில் கூட வந்துள்ளாராம். ஆனால் முத்தக் காட்சியில் மட்டும் நான் நடிக்கவில்லை என்கிறார் மல்லிகா.

அதற்கான காரணத்தை மட்டும் அவர் தெரிவிக்கவில்லை.

படத்தின் நாயகனான இர்பான் கான் கூறுகையில், இது வித்தியாசமான பாம்புக் கதை. வன்முறை, அகோரம், மர்மம், பீதி என எல்லாமே உள்ளது. நிர்வாணக் காட்சிகளும் படத்தில் உள்ளன. ஆனால் இதை சென்சார் போர்டு செக்ஸியான விஷயமாக மட்டும் பார்க்காமல், பெருந்தன்மையுடன் பார்த்து அனுமதிக்க வேண்டும். கதைக்கு மிக மிக முக்கியமான, பொருத்தமான காட்சிகள் இவை என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X