மம்முட்டியின் மாணிக் பாட்சா!

மம்முட்டியின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் பிக் பியும் ஒன்று. இப்படத்தை தற்போது தமிழுக்குக் கொண்டு வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஹிட் படமான பாட்ஷாவில், ரஜினியின் கேரக்டர் பெயர் மாணிக் பாட்சா.
அந்தப் பெயரையே இப்போது மம்முட்டியின் டப்பிங் படத்திற்கு வைத்து விட்டனர்.
மலையாளத்தில் வந்த ஸ்டைலிஷான ஆக்ஷன் படம் பிக் பி என்பது குறிப்பிடத்தக்கது.
தாயின் கொலைக்கு காரணமானவர்களைப் பழி வாங்கும் மகனின் கதைதான் பிக் பி.
இப்படத்தில் நம்ம ஊரு பசுபதி, போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளார். மம்முட்டி தாயின் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக இவர் வருகிறார்.
தமிழ் நடிகர் பாலா, மலையாள ஹீரோயின் மமதா மோகன்தாஸ் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
தமிழில் மம்முட்டிக்கு ஓரளவு மார்க்கெட் இருப்பதால் இப்படத்தை டப்பிங் செய்கின்றனர். கூடவே ரஜினி கேரக்டர் பெயரையும் வைத்து கூடுதல் பாப்புலாரிட்டியை ஏற்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











