வதந்தி கிளப்புறாங்களே... மம்தா வருத்தம்

By Staff

Mamta Mohandas
என்னைப் பற்றி சிலர் தப்புத் தப்பாக வதந்தி கிளப்பி வருவது வருத்தம் தருகிறது என்கிறார் மம்தா மோகன்தாஸ்.

சினிமாவில் நடிக்கிறாரோ இல்லையோ, மம்தா குறித்து ஏதாவது செய்தி வந்து கொண்டுதான் உள்ளது.

சமீப நாட்களாக அவர் குறித்து அடுத்தடுத்து வதந்திகள். முதலில் அவருக்குப் பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளதாக ஒரு செய்தி வந்தது. பின்னர் மலையாளத்தில் திலீப்புடன் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து விலகிக் கொண்டார் என செய்தி வந்தது. பின்னர் இந்திக்குப் போகப் போகிறார் என்று செய்தி கூறியது.

இப்படி தன்னைப் பற்றி அடுத்தடுத்து வந்த இந்த செய்திகளில் பெரும்பாலானவை வதந்தியே என்று புலம்புகிறார் மம்தா.

உண்மையில் நான் இந்திக்குப் போகும் திட்டம் இல்லை. இந்திப் படத்தில் நடிக்க ஆசை உள்ளது உண்மைதான். ஆனால் தற்போது நான் இம்தியாஸ் அலி படத்தில் நடிக்கப் போவதாக வெளியான செய்தி தவறு.

அதேபோல எனக்கு பன்றிக் காய்ச்சலும் வரவில்லை. உண்மையில், எனது மார்பகத்தில் இருந்த ஒரு கட்டியை ஆபரேஷன் மூலம் எடுத்தனர். இதனால் நான் ஓய்வில் இருந்தேன்.

திலீப் படத்தில் நான் நடிக்கவில்லை. எனக்குப் பதில் சார்மி நடிக்கிறார். அது உண்மைதான். எனது மார்பக கட்டி ஆபரேஷன் காரணமாகத்தான் என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்துதான் சார்மியை புக் செய்தனர். இதுதான் உண்மை என்கிறார் மம்தா.

அதேசமயம், அடுத்த ஆண்டுவாக்கில் ஒரு இந்திப் படத்தில் நடிக்கப் போகிறாராம் மம்தா. அதுகுறித்த தகவல்கள் இப்போதைக்கு சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும் என்றும் கூறுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X