'மங்காத்தா' அனுஷ்கா!

ரெண்டு படத்திற்குப் பிறகு தெலுங்கில் செட்டிலாகி விட்ட அனுஷ்கா தனது 2வது இன்னிங்ஸை சற்றே தடுமாற்றத்துடன் தொடங்கினார். முதலில் விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் இணைந்து நடித்தார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வேட்டைக்காரன், அனுஷ்காவை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது. ஆனால் பின்னர் சூர்யாவுடன் இணைந்து நடித்து வெளியான சிங்கம், அனுஷ்காவை குஷியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் தற்போது அடுத்த சூப்பர் நடிகரான அஜீத்துடன் இணையவுள்ளார் அனுஷ்கா.
அஜீத் நடிக்க வெங்கட்பிரபு இயக்க, தயாநிதி அழகிரி தயாரிக்கவுள்ள மங்காத்தா படத்தில் அஜீத்துக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா. நேற்றுதான் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாராம்.
முன்னதாக சமந்தா என்பவர் இந்தப் படத்தின் நாயகியாக பேசப்பட்டிருந்தார். அப்போது படத்தை இயக்குவதாக இருந்தவர் கெளதம் மேனன். ஆனால் மேனன் படத்திலிருந்து தூக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சமந்தாவையும் தூக்கி விட்டு அனுஷ்காவைக் கொண்டு வந்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











