'சிங்கிளுக்கும்' மேகா ரெடி!

By Staff

Megha Nair
தனி ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் கிடைத்த ரோல்களில் நடித்து வரும் மேகா நாயர் தற்போது குத்துப் பாட்டுக்கும் தயாராகி விட்டார்.

பசுபதி மே.பா. ராசக்காபாளையம் படத்தில் கவர்ச்சியாக நடித்து, தங்கம் படத்தில் தனி நாயகியாகவும் முன்னேறிய மேகா நாயர் இப்போது மன்மத ராஜ்ஜியம் படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக களம் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில், குத்துப் பாட்டுக்கும் ஆட்டம் போட தற்போது தயாராகி விட்டார். முதல் போணியாக அறியான் படத்தில் கவர்ச்சிகரமான ஒரு ஆட்டத்தைப் போட்டு முடித்துள்ளாராம்.

இப்படத்தில் ஆதித்யா - ராகிணி என புதுமுகங்கள் ஜோடி போட்டுள்ளனர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் பின்னி மில் வளாகத்தில் போட்ட செட்டில், கவர்ச்சிகரமான ஆட்டத்தைப் போட்டாராம் மேகா. கத்தாழக் கண்ணாலே பாடலுக்கு டான்ஸ் அமைத்த தினா இந்தப் பாட்டுக்கும் நடனம் வடிவமைத்துள்ளாராம். எனவே நிச்சயம் பாட்டு ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மேகா.

இந்தப் பாட்டு ஹிட் ஆனால் தொடர்ந்து குத்துப் பாட்டுக்கும் ஆடத் தயாராக இருப்பதாக கூறுகிறார் மேகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X