மேக்னா 'வாடா' .. கிரண் 'போடா'!

By Staff

Meghna Naidu
சுந்தர்.சி. மீண்டும் ஹீரோவாக நடிக்கும் வாடா படத்தின் 2வது நாயகியாக புக் ஆகியிருந்த கிரண் தூக்கப்பட்டு அவருக்குப் பதில் மேக்னா நாயுடுவை போட்டுள்ளனர்.

ஆயுதம் செய்வோம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் சுந்தர்.சி. நாயகனாக நடிக்கும் படம் வாடா. ஷெரில் பின்டோ இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

அவர் போதாது என்று இன்னொரு கவர்ச்சி நாயகியையும் பிளான் செய்தனர். இதையடுத்து அந்த இடத்தில் கிரணை புக் செய்தனர்.

நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு என்பதால் கவர்ச்சிகரமாக நடித்துத் தருகிறேன் என்று உறுதியளித்து ஒத்துக் கொண்டிருந்தார் கிரண்.

ஆனால் நேரம் கூடி வந்தாலும், சோகமும் கூடவே துரத்தும் என்பது போல கிரணைத் தேடி வந்த இந்த வாடா வாய்ப்பு போயே போய் விட்டது.

கிரண் நடிக்கவிருந்த கேரக்டரில் இப்போது நடிக்கவிருப்பவர் மேக்னா நாயுடு.

கிரணை விட மேக்னா நாயுடுவின் கிளாமர், கூடுதல் காந்தத்தோடு இருக்கும் என்பதால் கிரணை ஏறக்கட்டி விட்டு மேக்னாவை புக் செய்து விட்டனராம். சுந்தர்.சிக்கும் இதில் உடன்பாடுதானாம்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், சுந்தர். சி. இயக்கிய வின்னர் படத்தின் நாயகி கிரண் என்பதுதான்.

சுந்தர்.சி. இயக்குநராக இருந்தபோது பிடித்த கிரண், இப்போது ஹீரோவாக மாறிய பின்னர் கசந்து விட்டாரோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X