சூர்யாவுடன் நடிக்க ஆசைதான், ஆனால் உயரம் ஒத்து வராதே-நமீதா ஏக்கம்!
எனக்கு சூர்யாவுடன் நடிக்க ஆசைதான். எனக்குப் பிடித்த நடிகரும் கூட. ஆனால் அவருடைய உயரத்திற்கு நான் சரிப்பட மாட்டேன். எனவே என்னால் அவருடன் ஜோடி போட்டு நடிக்க முடியாது என்று கூறியுள்ளார் நமீதா.
'ஜைஜான்ட்டிக்' நடிகையான நமீதா, கவர்ச்சியிலும் சரி, அழகிலும் சரி செம உசத்திதான். இபப்போது முன்பை விட எடை குறைந்து, அழகு கூடி அட்டகாசமான 'டிலோனிக்ஸ் ரெஜியா' மலர்களைப் போல படு அம்சமாக இருக்கிறார்.
உயரமான ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி போட முடிகிறது என்ற வருத்தம் நமீதாவுக்கு உண்டாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு ரொம்பப் பிடித்த நடிகர் சூர்யா. அவருடன் இணைந்து பணியாற்ற ஆசையாக உள்ளது. ஆனால் அவருடைய உயரமும், என்னுடைய உயரமும் ஒத்துவராதே. எனவே என்னால் அவருக்கு ஜோடியாக ஆடிப் பாடி நடிக்க முடியாது என்பது வருத்தம்தான் என்கிறார் நமீதா.
தற்போது பிற மொழிப் படங்களில் சற்று பிசியாக இருக்கிறாராம் நமீதா. அதை முடித்துக் கொண்டு,நல்ல பட வாய்ப்புகள் கிடைத்தால் மறுபடியும் தமிழில் நடிப்பேன் என்கிறார் நமீதா.
ஆமாங்க, உங்களைக் காணாம ரொம்பத்தான் ஏக்கமாக இருக்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். சீக்கிரமா வந்து சேருங்க...!


Click it and Unblock the Notifications











