'சீக்கிரம் முடிச்சிங்குங்க...' - தயாரிப்பாளர்களுக்கு நவ்யா நிபந்தனை

நடிகை நவ்யா நாயருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகன் சந்தோஷ் மேனன். கேரள மாநிலம் செங்கனாச்சேரியைச் சேர்ந்த இவர், மும்பையில் உள்ள ஸ்ரீசக்ரா உத்யோக் என்ற நிறுவனத்தில், மார்க்கெட்டிங் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
நவ்யா நாயர்-சந்தோஷ் மேனன் திருமணம், கேரள மாநிலம் ஹரிப்பாடு என்ற இடத்தில், ஜனவரி மாதம் நடக்கிறது. இன்னும் சில தினங்களில் திருமண தேதியையும் அறிவிக்க உள்ளனர்.
இந்த நிலையில் நவ்யா நாயர் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சில படங்களில் ஓரிரு காட்சிகளில் நடிக்க வேண்டியுள்ளதாம்.
ஜனவரி மாதத்துக்குள் அனைத்துப் படப்பிடிப்புகள் மற்றும் டப்பிங் பணிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்குக் கூறிவருகிறாராம் நவ்யா.
திருமணத்துக்குப்பின் தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா? என்பதை அவர் இன்னும் முடிவு செய்யவில்லையாம். இந்த முடிவெடுக்கும் பொறுப்பை நவ்யாவிடமே விட்டுவிட்டாராம் அவரது வருங்கால கணவர்.


Click it and Unblock the Notifications











