சூதாட்டத்தில் எனக்கு தொடர்பில்லை! - நீத்து சந்திரா விளக்கம்

By Chakra

Neethu Chandra
கிரிக்கெட் சூதாட்டத்தில் எனக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்றார் நடிகை நீத்து சந்திரா.

யாவரும் நலம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நீத்து சந்திரா. தீராத விளையாட்டுப் பிள்ளையில் விஷாஸலுக்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது அமீரின் ஆதி பகவன் படத்தில் நடித்து வருகிறார். நீத்துசந்திராவுக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவின.

கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கில் பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிப் ஈடுபட்டிருந்தது சமீபத்தில் அம்பலமானது. முகமது ஆசிப்புக்கும் நீது சந்திராவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் முகமது ஆசிப்பின் சூதாட்ட ரகசியங்கள் நீது சந்திராவுக்கு தெரியும் என்றும் பாகிஸ் தான் பகிரங்க படுத்தியது.

மங்காத்தா படத்தில் அஜீத்துடன் நீது சந்திரா நடிப்பதாக இருந்தது. கிரிக்கெட் சர்ச்சை காரணமாக அவரை நீக்கி விட்டனர்.

இது பற்றி நீதுசந்திராவிடம் கேட்டபோது, "கிரிக்கெட் சூதாட்டத்தில் எனக்கு தொடர்பு இருப்பதாக வந்த செய்திகள் ஆதாரமற்றவை. பொய்யானவை. எனக்கும் கிரிக்கெட் விளையாட்டுக்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது. அப்படி இருக்க என்னை பற்றி எப்படி வதந்திகள் பரவின என்று புரியவில்லை.

இது போன்ற விஷயத்துக்கெல்லாம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை. அதற்கு நேரமும் இல்லை. எனது சிந்தனை. செயல் எல்லாமே சினிமாவில்தான் இருக்கிறது. வேறு எது பற்றியும் சிந்திக்க நேரம் இல்லை.

அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடிக்க என்னிடம் கேட்டது உண்மைதான். ஆனால் ஆதிபகவன் படப்பிடிப்பில் இருந்ததால் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டது. அதனால்தான் நடிக்கவில்லை. நிச்சயம் அவருடன் ஜோடி சேருவேன்", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X