நமீதாவுக்காக என் காட்சிகளை வெட்டிட்டாங்க! - நிலா புகார்

நமீதா, நிலா நடித்த ஜகன் மோகினி படம் தீபாவளிக்கு ரிலீசாகி இப்போது தியேட்டர்களை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் நமீதா மோகினி கேரக்டரிலும், நிலா இளவரசி வேடத்திலும் நடித்துள்ளனர்.
படம் துவங்கும்போது நிலாதான் முதல் நாயகி என்று கூறப்பட்டது. இதனால் பெளர்னமி நிலவு போல பிரகாசமாக இருந்தார் நிலா. ஆனால் ரிலீசாகும் போது நிலாவின் பாத்திரம் தேய்ந்து, நிலாவின் முகத்தை அமாவாசை கருப்பாக்கி விட்டதாம்.
ஜெகன்மோகினி வெளியானதும் படத்தைப் பார்த்த நிலா, தனது ரோலை குண்டக்க மண்டக்க கட் பண்ணி விட்டார்களே என்று புலம்பி கொதித்துப் போய், பேட்டியளித்து வருகிறார் (விளம்பர உத்தியோ!).
அவர் கூறுகையில், "ஹைதராபாத் தியேட்டரில் ஜகன்மோகினி படம் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. படத்தில் நிறைய காட்சிகளில் நடித்து இருந்தேன். தியேட்டரில் பார்த்த போது அவை இல்லை. 30 நிமிடங்கள் நான் நடித்த காட்சிகளை வெட்டி எறிந்துள்ளனர்.
ஜகன் மோகினி ரிலீசுக்கு சில காட்சிகள் முன்பிருந்தே நமீதாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அவரது படங்களை வைத்தே விளம்பரப்படுத்தினார்கள். போஸ்டர்களில் நமீதா படத்தை பெரிய அளவிலும் எனது படத்தை ஸ்டாம்ப் அளவிலும் அச்சிட்டு இருந்தனர். இது எனக்கு வேதனை அளிக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











