லிங்குச்சாமியின் 'பையா'

இப்படத்தின் ஷூட்டிங் பலமுறை தள்ளிப் போய் வருகிறது. காரணம், கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பிசியாக இருப்பதால்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பை தொடங்கி விட தீர்மானித்து விட்டார் லிங்குச்சாமி. அதை கார்த்தியிடமும் மறக்காமல் சொல்லி விட்டார்.
லிங்குச்சாமியின் சொந்த பட நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தற்போது நதியா நடிக்கும் பட்டாளம் உள்ளிட்ட இரு படங்களைத் தயாரித்து வருகிறது.
இவற்றை முடித்து விட்டுத்தான் பையா படத்திற்கு போகிறார் லிங்குச்சாமி.
சீக்கிரம் வாயா, பையா!
Comments


Click it and Unblock the Notifications