எதற்கும் தயாராம் பூனம்

பூனம் பாஜ்வாவுக்கு முதல் படம் சேவல். அதைத் தொடர்ந்து தெனாவெட்டு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார்.
இரு படங்களிலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அடுத்து அவரது கிளாமர் பேசப்படப் போகிறது. காரணம், பூனமும் கிளாமர் குளத்தில் காலெடுத்து வைக்கவுள்ளார்.
பூனம் அடுத்து நடிக்கவுள்ள இரு படங்களிலும் ஜீவாதான் நாயகன். இந்த இரண்டு படங்களுக்கும் ஜீவாவே, பூனத்தின் பெயரை ரெக்கமன்ட் செய்தாராம்.
முதல் படத்தை தெனாவெட்டு படத்தை எடுத்த இ.எல்.கே. நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்தில் படு கிளாமராக நடிக்கப் போகிறாராம் பூனம். இந்த கேரக்டரில் பூனம் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் எனக் கருதிய ஜீவா, அவரே நேரடியாக பூனத்திடம் பேசி விளக்கியுள்ளார்.
ஜீவாவே சொல்லி விட்டதால், அப்ஜெக்ஷன் இல்லை என்று கூறி ஒப்புக் கொண்டு விட்டாராம் பூனம்.
அதேபோல ஜீவாவின் அடுத்த படத்தின் கதையும் பிடித்துப் போனதால் அதிலும் நடிக்க ஓ.கே. சொல்லி விட்டாராம்.
இனிமேல், ஹோம்லி, கிளாமர் என எந்த மாதிரியான கேரக்டர் கிடைத்தாலும் நடித்துக் கொடுக்கத் தயார் என ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார் பூனம்.


Click it and Unblock the Notifications











