தளர்த்திய பிரியா மணி!

பாரதிராஜாவின் மோதிரக் கையால் குட்டுப் பட்டவர் பிரியா மணி. ஆனால் பிரியா மணிக்கு நேரம் சரியில்லை. நல்ல சில பட வாய்ப்புகளில் நடித்தும் கூட ராசியில்லாத நடிகையாகவே பார்க்கப்பட்டார் பிரியா.
இந்த நிலையில்தான் அமீரின் பருத்தி வீரன், பிரியாவுக்கு புதிய வெளிச்சத்தைக் காட்டியது. அதில் முத்தழகு கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு மிரட்டலைப் பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டனர்.
பருத்தி வீரன், பிரியா மணியை ஒரே தூக்காக தூக்கி விட்டது. அவரைத் தேடி நிறையப் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எல்லாமே முத்தழகு டைப் கேரக்டர்களாக இருந்ததால் அப்செட் ஆனார் பிரியா.
இனிமேல் கிராமிய கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று தடாலடியாக கூறிய பிரியா மணி அத்தோடு நிற்காமல் கிளாமர் களத்தில் பாய்ந்தார்.
தோட்டா, மலைக்கோட்டை என அடுத்தடுத்து வந்த இரு படங்களிலும் கிளாமர் கடலில் முத்தெடுத்தார். அவரது கிளாமர் பாய்ச்சலைப் பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் பட வாய்ப்புகள்தான் சரிவர இல்லை.
கிளாமராகத்தான் நடிப்பேன் என்ற முடிவில் இருந்த பிரியா மணிக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாம். அவரது கைவசம் இப்போது பெரிய அளவில் படம் ஏதும் இல்லை. இதையடுத்து தனது கொள்கையைத் தளர்த்திக் கொண்டுள்ளாராம் பிரியா மணி.
கிராமிய வேடம் உள்பட எந்த வேடத்திலும் நடிக்கத் தயார் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். இதைத் தொடர்ந்து சில இயக்குநர்கள், கிராமப்புற கேரக்டரில் நடிக்குமாறு பிரியாவை அணுகியுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











