பிரியதர்ஷன் படத்திலிருந்து ஆசின் நீக்கம்!
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்கவிருந்த ஆசின் திடீரென்று நீக்கப்பட்டுள்ளார்.
ஆமிர்கானுடன் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குமேல் கஜினி இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆசின். வரும் அக்டோபர் மாதம்தான் இந்தப் படம் வெளியாகிறது.
இதற்கிடையே பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கும் புதிய இந்திப் படமான அய்சே கோ தய்சா எனும் புதிய படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஆசின்.
ஆனால் தனக்கு விளம்பரப் படங்களில் நடிக்க வேண்டிய கமிட்மெண்டுகள் இருப்பதாலும், கஜினி படத்துக்காக தனித்தனியாக பிரஸ் மீட்டுகள் நடத்தவிருப்பதாலும் உடனடியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என்று கூறியிருந்தாராம். மேலும் தனது கால்ஷீட்டைக் கவனிக்கும் நிறுவனம் சொல்லும் தேதிகளில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளுமாறும் ஆசின் கூறியுள்ளார்.
ஆனால், அப்படியெல்லாம் காத்திருக்க முடியாது எனக் கூறிவிட்ட ப்ரியதர்ஷன், அந்தப் படத்திலிருந்தே, ஆசினைத் தூக்கிவிட்டார்.
கதையில் இப்போது நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டுவிட்டது. இந்த மாற்றங்களின்படி, கதையில் மூன்று நாயகிகள். ஆனால் ஆசின் இப்போது பாலிவுட்டில் மிகப் பெரிய நடிகை. மூன்று நாயகிகளில் ஒருவராக அவரை நடிக்க வைக்க விரும்பவில்லை எனக் கூறிவிட்டாராம் ப்ரியதர்ஷன்.
இதுதான் ப்ரியதர்ஷன் ஸ்டைல்!


Click it and Unblock the Notifications











