ஒரு குலுக்கு - ஒரு சுளுக்கு!

By Staff

Ragasiya
ஓடிப் போலாமா படத்தில் இடம் பெறும் குத்துப் பாட்டுக்கு ஆடப் போக இடுப்பில் சுளுக்கு ஏற்பட்டு விட்டதாம் ரகஸ்யாவுக்கு.

சந்தியா, புதுமுகம் பரிமள் நடிக்கும் படம் ஓடிப் போலாமா. கண்மணி இயக்குகிறார். படத்தின் ஹைலைட்டாக ரகஸ்யாவின் குத்துப் பாட்டு இடம் பெறுகிறது.

இதுவரை ஆடியிராத அளவுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்டுள்ளாராம் ரகஸ்யா. இந்தப் பாட்டுக்காக உடம்பை வளைத்து ஆடப் போக அவருக்கு இடுப்பில் சுளுக்கு ஏற்பட்டு விட்டதாம்.

இந்த சுளுக்கிலிருந்து விடுபட 3 நாட்களானதாம் ரகஸ்யாவுக்கு. இருந்தாலும் பாடலும், ஆடலும் சிறப்பாக வந்திருப்பதால் ரகஸ்யாவுக்கு சுளுக்கு பற்றி கவலையே இல்லையாம்.

படத்தின் நாயகி சந்தியாவும் கூட இந்தப் படத்திற்காக தனது உடலை சற்றே மெலிய வைத்து நடித்திருக்கிறாராம். கொஞ்சம் போல கிளாமரிலும் தாராளம் காட்டியிருக்கிறாராம்.

உடல் எடையைக் குறைத்தால் நிறைய பட வாய்ப்புகள் வரும், இல்லாவிட்டால் மார்க்கெட் மந்தமாகி விடும் என நட்பு வட்டாரம் நிறைய அட்வைஸ் செய்ததால், மெனக்கெட்டு உடல் எடையைக் குறைத்து பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு மெலிந்துள்ளாராம் சந்தியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X