ஆதிக்கு அக்கா ராஜஸ்ரீ

வெறுமனே வீட்டில் இருப்பதற்குப் பேசாமல் இப்படி அக்கா, அண்ணி போன்ற கேரக்டர்களில் நடிக்கலாமே என்கிறார் கேட்டால்.
ஹீரோயினாக சினிமாவுக்கு வந்தவர் ராஜ ஸ்ரீ. கருத்தம்மா படத்தின் மூலம் அறிமுகமான அவருக்குப் பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை. இடையில் பாலாவின் சேது, நந்தா படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தார்.
தற்போது அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்கத் தயாராகி விட்டார். மிருகம் பட ஹீரோ ஆதி ஹீரோவாக நடிக்கும் அய்யனார் படத்தில் அவருக்கு அக்காவாக நடிக்கிறாராம் ராஜ ஸ்ரீ.
எந்தக் கேரக்டராக இருந்தாலும் பரவாயில்லை, நான் நடிக்கத் தயார் என்றும் அறிவித்துள்ளார். அதேசமயம், தனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதவிர சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இதயம் என்ற மெகா சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம் ராஜஸ்ரீ.
More from Filmibeat
adhi ayyanar அக்கா கேரக்டர் அய்யனார் ஆதி இதயம் சினிமா டிவி தொடர் தமிழ் ராஜஸ்ரீ cinema idhayam rajasree sister roles tv serial


Click it and Unblock the Notifications











