மீண்டும் அதிரடி நீலாம்பரி!!

சண்டை படத்தில் நதியா கேரக்டரில் நடிக்க முதலில் ரம்யாவைத்தான் அழைத்தார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். ஆனால் அப்போது நடிக்க முடியாது என மறுத்துவிட்டார் ரம்யா கிருஷ்ணன்.
அதன்பிறகும் கூட பல வாய்ப்புகளை மறுத்து வந்தவர், இப்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்தப் படம் ஆறுமுகம். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குகிறார் சுரேஷ் கிருஷ்ணா.
இந்தப் படத்தில் நீலாம்பரி ரேஞ்சுக்குப் பெயர் சொல்லும் அதிரடி வில்லி வேடமாம் ரம்யாவுக்கு.
தனது வேடத்தின் முக்கியத்துவத்தைக் கேட்டதும் மொத்தமாக 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ரம்யா. தேவையென்றால் இன்னுமும் தருவதாகவும் உறுதியளித்துள்ளாராம்.
பரத்துடன் ரம்யாவுக்கு குத்து டான்ஸ் உண்டா டைரக்டர் சார்?
Comments


Click it and Unblock the Notifications