'ஜகா' வாங்கிய சந்தியா

By Staff

Sandhya
ராஜாதி ராஜா படத்தில் ராகவ லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்த சந்தியா தற்போது திடீரென ஜகா வாங்கியுள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படம் ராஜாதி ராஜா. தற்போது அதே பெயரில் ராகவ லாரன்ஸ் நடிக்க புதிய படம் ஒன்றை ஷக்தி சிதம்பரம் தயாரித்து, இயக்கவுள்ளார்.

இப்படத்தில் லாரன்ஸுக்கு 6 ஹீரோயின்கள், 6 வில்லன்களாம். ஆனால் லாரன்ஸ் மட்டும்தான் ஹீரோ.

ஹீரோயின்களை தற்போது புக் செய்து வருகிறார்கள். இதுவரை மும்தாஜ், காம்னா ஜெட்மலானி, சந்தியா, சமிக்ஷா மற்றும் கருப்பசாமி குத்தகைதாரர் புகழ் மீனாட்சி ஆகியோர் புக் ஆகியிருந்தனர்.

இன்னும் மிச்சமுள்ள ஒரு ஹீரோயினை தேடி வந்த நிலையில் திடீர் 'செட்பேக்' ஆக சந்தியா படத்திலிருந்து விலகி விட்டாராம். கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று ஷக்தி கூறியதால், அந்த 'சக்தி' எனக்கில்லை என்று கூறி விலகி விட்டாராம் சந்தியா.

இதனால் அவரது இடத்தையும் சேர்த்து இரண்டு பேராக தேடிக் கொண்டிருக்கிறாராம் ஷக்தி. அனேகமாக ஒரு ஹீரோயினாக நமீதாவை புக் செய்யும் வாய்ப்புள்ளது.

படத்தில் இப்படி ஆறு ஹீரோயின்கள், ஆறு வில்லன்கள் என்று வித்தியாசம் காட்டியிருப்பதைப் போல பாடல்களிலும் வித்தியாசம் காட்டவுள்ளார் ஷக்தி. அதாவது படத்தில் ஐந்து ரீமிக்ஸ் பாடல்கள் இடம் பெறப் போகிறதாம்.

அப்ப தியேட்டரில் ஆளுக்கு அஞ்சு டிக்கெட் கொடுப்பாங்களா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X