twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சங்கீதாவுக்கு திருமணம்

    By Staff
    |

    Krish with Sangeetha
    திருவண்ணாமலையில் இன்று நடிகை சங்கீதாவும், பின்னணிப் பாடகர் கிரீஷுக்கும் இன்று திருமணம் நடந்தது. பெரும் திரளான ரசிகர்கள் திரண்டு வந்து சங்கீதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    ரசிகா என்ற பெயரில் முன்பும், பிதாமகனுக்குப் பின்னர் சங்கீதா என்ற பெயரிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ள சங்கீதா, வளரும் பின்னணிப் பாடகர் கிரீஷை காதலித்தார்.

    இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளமுடிவு செய்தனர்.

    இந்தக் கல்யாணத்தில் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் இருந்தன. இருப்பினும் இரு வீட்டாரையும் சங்கீதாவும், கிரீஷவும் சமாதானப்படுத்தினர்.

    இதைத் தொடர்ந்து இன்று காலை திருவண்ணாமலை, அண்ணாமலையார் சன்னதியில், சங்கீதா, கிரீஷ் திருமணம் நடந்தது.

    காலை ஏழே முக்கால் மணிக்கு சங்கீதாவும், கிரீஷும் கோவிலுக்கு வந்தனர். ரோஸ் நிறத்தில் பட்டுப்புடவையுடன் சங்கீதா வந்தார். கிரீஷ் பட்டு வேட்டி, சட்டையில் வந்தார்.

    அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் திருமாங்கல்யம் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமலை அம்பாளை மணமக்கள் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து ஆலய வளாகத்தில் உள்ள கோபுரத்து இளையனார் சன்னதி மண்டபத்தில் முகூர்த்தம் நடந்தது. காலை 8.35 மணிக்கு நடிகை சங்கீதா கழுத்தில் கிரீஷ் தாலி கட்டினார். அதனை தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

    நடிகர்கள் பாண்டியராஜன், ஜீவா, சின்னிஜெயந்த், பிரிதிவிராஜ், யோகி தேவராஜ், பிரேம்ஜி, இயக்குநர்கள் கங்கை அமரன், பாலா, தரணி, எஸ்.பி. சரண், நடிகைகள் ஸ்ரீபிரியா, ரீமாசென், மும்தாஜ், லட்சுமிராய், விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி, மகேஷ்வரி உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர், அண்ணாமலையார் கோயில் அலுவலகத்தில் சங்கீதா கிரீஷ் கையெழுத்திட்டு திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். கிரீஷ் தரப்பில் அவரது அக்காள் கணவர் சீமோர் கையெழுத்திட்டார்.

    அண்ணாமலையார் கோயிலில் இன்று 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இத் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் நடிகை சங்கீதா திருமணத்திலும் பங்கேற்றனர். அத்துடன் ரசிகர்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

    சங்கீதா கல்யாணம் நடந்ததாலும், பெருமளவில் கல்யாணங்கள் நடந்ததாலும், கோவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X