'தங்கச்சி'யை வெறுக்கும் சரண்யா!

காதலுக்கு மரியாதை படத்தில் குட்டிப் பெண்ணாக வந்து போனவர்தான் சரண்யா மோகன். தொடர்ந்து ஒரு நாள் ஒரு கனவு படத்திலும், நடித்தார். சமீபத்தில் யாரடி நீ மோகினி படத்தில் நயனதாராவின் தங்கச்சியாக நடித்தார். இந்தப் படத்தில்தான் அவர் அதிகம் பேசப்பட்டார். பின்னர் ஜெயம்கொண்டானிலும் நடித்திருந்தார்.
லேட்டஸ்டாக வெளியான மகேஷ், சரண்யா மற்றும் பலர் படத்தில் நடித்திருந்தார். பஞ்சாமிர்தம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது பரத்தின் தங்கச்சியாக ஆறுமுகம் படத்தில் நடித்துள்ளார். அஆஇஈ படத்தில் இவரும், மோனிகாவும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார் சரண்யா. மேலும், இனிமேல் தங்கச்சி வேடத்தில் நடிக்க மாட்டாராம். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பாராம். பரத்துக்கு தங்கச்சியாக நடித்ததோடு சரி. இனிமேல் ஒன்லி ஹீரோயின் ரோல் மட்டுமே என்கிறார் இந்த குட்டையழகி சரண்யா.
மலையாளத்திலிருந்து வந்திருந்தாலும் முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே நடித்து வருவதாக கூறும் சரண்யா, தமிழ் திரையுலகம்தான் எனக்கு சவுகரியமாக இருப்பதாக கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











