விக்ரமுடன் மீண்டும் ஸ்னேகா!

புன்னகை இளவரசி ஸ்னேகாவும், சீயான் விக்ரமும் இணைந்து பிரபு சாலமோன் இயக்கத்தில் கிங் படத்தில் நடித்தனர். படம் அப்போது சரியாகப் போகவில்லை.
இந்த நிலையில் பெரிய இடைவெளிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைகின்றனர்.
மோகன் நடராஜனின் ராஜகாளியம்மன் மீடியாஸ் நிறுவனம் இப்படத்தைதத் தயாரிக்கிறது. வெற்றி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்கப் போகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.
ஸ்னேகா தவிர இன்னொரு முன்னணி நாயகியும் படத்தில் இருப்பாராம். கந்தசாமியை முடித்து விட்டு இப்படத்திற்கு வருகிறார் விக்ரம். ஜூன் 2வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குமாம்.
Comments


Click it and Unblock the Notifications