முட்டை வீசி ஹோலி கொண்டாடிய தம்மு!

By Staff

Tamanna
ஹோலி பண்டிகையை இன்று கோலாகலமாகக் கொண்டாடினர் தமிழில் முன்னணி நடிகைகளாக உள்ள தமன்னா, ஸ்ரேயா, நீத்து சந்திரா மற்றும் ஜெனிலியா போன்ற வட இந்திய நடிகைகள். கலர் பொடிகளுக்கு பதில் முட்டையை வீசி ஹோலி கொண்டாடினார் தமன்னா.

ஸ்ரேயா கொச்சியில் போக்கிரி ராஜா என்ற மலையாள படப்பிடிப்பில் இருந்தார். அங்கு படப்பிடிப்பு இடைவேளையில் ஹோலி கொண்டாடினார். தயாராக கொண்டு வந்திருந்த கலர் பொடியை துணை நடிகைகள் மீது அள்ளி வீசினார். கலர் தண்ணீரையும் பீய்ச்சி அடித்தார்.

"ஹோலி பண்டிகை கொண்டாடுவதில் எனக்கு ரொம்ப இஷ்டம். தோழிகள் மேல் கலர் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதில் அலாதி பிரியம் உண்டு.

சிறு வயதில் கலர்பொடி பட்டால் தோலில் வியாதி வரும் என்று என் தாயார் பயமுறுத்தி வீட்டுக்குள் வைத்திருப்பார். அதை மீறி வெளியே ஓடி விடுவேன். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் மேல் எல்லாம் கலர் பொடி, கலர் தண்ணீரை அடிப்பேன். பலரிடம் இதற்காக திட்டும் வாங்கி இருக்கிறேன்.

இந்த வருடம் வீட்டில் ஹோலி கொண்டாட முடியாமல் போனது வருத்தமாகத்தான் உள்ளது", என்றார்.

முட்டை வீசிய 'தம்மு'...

தம்மு என செல்லமாக அழைக்கப்படும் தமன்னா மும்பையில் உள்ள தனது வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டாடினார். தெரிந்த, தெரியாத அனைவர் மீதும் கலர் பொடி, கலர் தண்ணீரை பீய்ச்சி அடித்தார். நெருங்கிய தோழிகள் மீது மட்டும் முட்டை வீசி தாக்க, பதிலுக்கு அவர்களும் தம்மு முட்டை வீசினர்.

"ஹோலி பண்டிகையில் முட்டை வீசுவது என் சிறுவயது பழக்கம். தோழிகள் ஒருத்தருக்கொருத்தர் மாறி மாறி முட்டை வீசுவோம். இதனால் பல தடவை எங்களுக்குள் சண்டையே வந்து இருக்கிறது.

சுத்தமாக இருப்பதுதான் எனக்கு பிடிக்கும். தோழிகள் மிஸ் கிளீன் என்றுதான் அழைப்பார்கள். அப்படிப்பட்ட நான் ஹோலிப் பண்டிகையின்போது மட்டும் முழுசா 'மிஸ் அன்கிளீனா' மாறிடுவேன்.

கலர் தண்ணியும், கலர் பொடியும் அடிக்க யார் வந்தாலும் முகத்தை காட்டிகிட்டு நிற்பேன். அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஆயிடுவேன்.

நான் தென்னிந்தியாவில் பிஸியாக இருந்தாலும் மும்பையில்தான் என் குடும்பத்தினர் உள்ளனர். அவர்களுடன்தான் எப்போதும் இப்பண்டிகையை கொண்டாடுவேன். இந்த வருடமும் இன்று சூட்டிங் இல்லாததால் அவர்களுடன் கொண்டாடுகிறேன். உறியடி விழா ஒவ்வொரு முறையும் நடக்கும். அதிலும் கலந்து கொண்டு உறியடிப்பேன். ரொம்ப திரில்லிங்கான அணுபவம்.

இன்னைக்கு மட்டும் கண்டபடி சாப்பிடுவேன். அம்மா சத்தம் போடுவார். இன்னைக்கு ஒருநாள் மட்டும் சாப்பாடு விஷயத்தில் தடை போடாதீங்கன்னு அவரை விலக்கிவிடுவேன்..." என்கிறார்.

நீத்து சந்திரா படப்பிடிப்புக்கு லீவ் போட்டுவிட்டு ஹோலி கொண்டாடுகிறாராம்.

அவர் கூறுகையில், "வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கொண்டாட மறக்காத நாள் போலி பண்டிகைதான். அதை அனுவித்துக் கொண்டாடுகிறேன் நான்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X