நமீதாவின் 'இடி'!

ஷக்தியின் சினிமா 'சக்தியாக' நமீதா விளங்குகிறார். அவர் இயக்கும், தயாரிக்கும் படங்களில் நமீதா 'டிபால்ட் பிராப்பர்டி' ஆகி விட்டார். கதை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நமீதா இருப்பார் என்ற அளவுக்கு நமீதாவுக்கும், ஷக்திக்கும் இடையிலான நட்பு ஆழமாக உள்ளது.
சமீபத்தில் வெளியான சண்டை படத்திலும் நமீதா நீக்கமற நிறைந்திருந்தார். கரகாட்டக்காரியாக ஆடி, ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் ஏற்படுத்திய பதைபதைப்பு இன்னும் கூட போயிருக்காது.
இந்த நிலையில் அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் ஷக்தி. இதில் நமீதாதான் நாயகி. அதேபோல ஹீரோவாக சுந்தர்.சியையே புக் செய்து விட்டார். இப்படத்திற்கு சுந்தர்.சிக்கு பெரும் சம்பளத்தை பேசியுள்ளாராம் ஷக்தி.
கவர்ச்சி மின்னலாக வந்து சென்ற நமீதா இப்படத்தில் கவர்ச்சி இடியாக கலக்கப் போகிறாராம். படத்திற்குப் பெயரும் 'இடி'தான். இப்படத்தை தயாரித்து இயக்கவும் போகிறார் ஷக்தி.
சண்டை படத்தில் நமீதா ஹீரோயின் இல்லை. இருந்தாலும் ஷக்தி கேட்டுக் கொண்டதால் சின்னதாக ஒரு ரோலில் வந்து போனார். இதனால் படத்திற்கு கிடைத்தது பெரும் வசூல். அதற்கு நன்றியாகத்தான் இடி படத்தில் நமீதாவையே நாயகியாக்கி விட்டாராம் ஷக்தி.
படத்தில் இரு ஐட்டம் ஆட்டங்களும் உண்டாம். படம் முழுக்க காமெடியும், கவர்ச்சியும் கை கோர்த்து உலா வரும் என்கிறார் இடி குறித்து ஷக்தி.
வழக்கம் போல இப்படத்திற்கும் இமான்தான் இசையாம்.
நமீதாவின் இடி, மின்னலில் எத்தனை பேரின் மனதில் மழை கொட்டப் போகிறதோ!


Click it and Unblock the Notifications











