கல்யாணத்திற்கு அவசரமில்லை - கரீனா

கரீனா கபூரும், சைப் அலிகானும் தீவிர காதலர்கள் என்பது பாலிவுட்டையும் தாண்டி அனைத்து இந்திய மக்களுக்கும் இப்போது நன்கு தெரிந்த விஷயம். இருவரும் எப்போது கல்யாணம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிறையவே உளளது.
ஆனால் கல்யாணத்துக்கு தாங்கள் அவசரப்படவில்லை என்கிறார்கள் கரீனாவும், சைபும்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், உடனே கல்யாணம் செய்து கொள்ளும் திட்டம் எங்களிடம் இல்லை. கல்யாணம் நடந்தால் அது எங்களது தொழிலை பாதிக்கும்.
காதலிப்பதே சுகமாக உள்ளது. அந்த சுகத்தை மேலும் சில காலம் அனுபவிக்க விரும்புகிறோம். திருமணம் குறித்த எண்ணமே எங்களுக்கு இன்னும் வரவில்லை என்றனர்.
கரீனா கூறுகையில், சைப் அலி கான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க ஆசைப்படுகிறார். நானும் பெரிய பெரிய ரோல்களில் நடிக்க விருப்பமாக உள்ளேன். இதெல்லாம் நிறைவேறிய பின்னர்தான் கல்யாணத்தைப் பற்றி யோசிக்க வேண்டும் என்றார் கரீனா.
இருவரும் இந்துஸ்தான்டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











