தவிக்கும் பிரியா மணி

By Staff

Priyamani
தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் மீதும், இயக்குநர்கள் மீதும் பிரியா மணியின் அம்மா படு வருத்தமாக இருக்கிறாராம்.

பிரியா மணியின் திரையுலக வாழ்க்கையை ப.வீ.மு, ப.வீ.பி என இரண்டாக பிரிக்கலாம். பருத்தி வீரனுக்கு முன்பு வரை பிரியா மணியைத் தேடி யாருமே போகவில்லை. ஆனால் பருத்தி வீரனுக்குப் பின்பு நிறையப் படங்கள் வந்தன.

ஆனால் இங்குதான் விதி கொஞ்சம் போல பேஸ் பால் விளையாடியது. பருத்தி வீரன் டைப்பில் நிறையப் படங்கள் வந்ததால், அடடா, இது தப்பான ரூட்டாச்சே என்று அவற்றை நிராகரித்து விட்டு மகா தப்பான ரூட்டுக்கு மாறினார்.

முத்தழகி கேரக்டரை தமிழ்நாட்டு ஜனங்கள் மறக்க வேண்டும் என்பதற்காக அவர் தேர்ந்தெடுத்த ரூட்தான் கிளாமர். படு கிளாமராக நடிக்க ஆரம்பித்த அவர் மலைக்கோட்டையில் கோடிட்டுக் காட்டினார். தோட்டாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.

இதனால் பிரியாவைத் தேடிப் போன வாய்ப்புகள் எல்லாம் ரூட் மாறி விட்டன. அதேசமயம் கிளாமர் பாத்திரங்களும் கூட அவரைத் தேடி வராமல் போய் விட்டன. விளைவு, புதுப் படம் எதுவும் இல்லாமல், பிரியா, ப்ரீயாகி விட்டார்.

பிரியாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையைக் கண்டு அவரை விட அவரது அம்மாவுக்குத்தான் ரொம்ப கோபம், வருத்தம். ஏன்தான் இப்படி எனது மகளின் அருமை புரியாமல் இருக்கிறார்களோ என்று புலம்பும் அவர் முன்னணி நாயகிகளைப் பார்த்து பொறுமுகிறாராம்.

என் பெண்ணிடம் என்ன இல்லை. அந்த நடிகைகளிடம் மட்டும் அப்படி என்ன இருக்கிறது என்று அங்கு ஓடுகிறார்கள் என்று கடுப்பாக கேட்கிறாராம்.

ஆனால் பிரியாவுக்கு வாய்ப்புகள் குறைய அவர்தான் முக்கிய காரணம் என ஒரு தரப்பு புலம்புகிறது. அதாவது தன்னைத் தேடி வருகிறவர்களிடம் சம்பளத்தில் படு கறாராக இருக்கிறாராம் பிரியா. தான் கேட்கும் சம்பளத்திற்கு மறு பேச்சு பேசாமல் சம்மதிக்கிறவர்களிடம் மட்டுமே கதை கேட்டு நடிக்க சம்மதிக்கிறாராம்.

இதனாலும் கூட பிரியாவைத் தேடி வாய்ப்புகள் போக மறுக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X