சனா 'ஆட்டம்'-ஆதங்கத்தில் ஆம்னா!

தமிழுக்கு எப்படி சனா கான் வளரும் நடிகையோ, அதேபோல கன்னடத்தில் வளரும் நடிகை ஆம்னா ஷெரீப். தற்போது சனா மீது கடும் கோபமாக இருக்கிறார் ஆம்னா. ஏனாம்...?
கன்னடத்தின் முன்னணி ஹீரோவான கணேஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக முதலில் ஆம்னாவைத்தான் முடிவு செய்து வைத்திருந்தனர். ஆனால் இடையில் என்ன நடந்ததோ ஆம்னாவைத் தூக்கி விட்டு இப்போது சனாவை கொண்டு வந்துள்ளனராம்.
இதனால் ஆம்னா கடும் டென்ஷனாகியுள்ளார். எல்லாத்துக்கும் சனாதான் காரணம் என்று அழாத குறையாக கூறும் ஆம்னா, கணேஷின் மனைவி ஷில்பாவை ஒரு பார்ட்டியில் வைத்து பார்த்துள்ளார் சனா. அப்போது என்ன சாம்பிராணி போட்டோரோ தெரியவில்லை. என்னை தூக்கி விட்டதாக இப்போது கூறுகிறார்கள்.
சனாவுக்கு இப்போது நேரம் சரியாக இருக்கிறது. ஆனால் எனக்கும் ஒரு நேரம் வராமலா போய் விடும். அப்போது வைத்துக் கொள்கிறேன் கச்சேரியை என்று கண்ணைக் கசக்கியபடி கூறுகிறாராம்.
தமிழில் சிலம்பாட்டம் மூலம் நாயகியான சனா கையில் தற்போது ஆயிரம் விளக்கு, சாந்துப் பொட்டு, பயணம் என கை கொள்ளாத அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் சைடிலும் போய்ப் பார்ப்போம் என்றுதான் கன்னடத்திற்கும் புகுந்துள்ளாராம். ஆனால் போன இடத்தில் பொல்லாப்பு வந்து சேர்ந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











