லாரன்ஸின் 'பெட்' ஆன லட்சுமி ராய்!

முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான படம் பெண் சிங்கம். இப்படத்தில் லாரன்ஸும், லட்சுமி ராயும் இணைந்து ஒரு கலக்கல் பிளஸ் கவர்ச்சிகரமான குத்துப் பாட்டுக்கு செமத்தியான ஆட்டம் போட்டனர்.
பாடல் ஹிட் ஆனதோ, ரசிகர்களுக்கு ஹீட்டை ஏற்றி விட்டது உண்மை. லட்சுமி ராயின் டான்ஸ் நுட்பத்தால் கவரப்பட்டதால்தான் இப்போது தனது காஞ்சனா படத்தில் அவரை இன்னொரு ஹீரோயினாக லாரன்ஸ் புக் செய்துள்ளார் என்கிறார்கள்.
பெண் சிங்கத்தில் வெறுமனே டான்ஸ் மட்டும் ஆடிய லட்சுமி ராய், காஞ்சனாவில் நடிப்போடு டான்ஸைத் தரப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முனி படத்தின் 2ம் பாகம்தான் காஞ்சனா என்பதை ஏற்கனவே சொல்லியுள்ளோம்.
Comments


Click it and Unblock the Notifications