நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீனா பெங்களூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் வித்யாசாகர் என்பவரை மணந்தார். பின்னர் நடிப்பில் இருந்து மெல்ல மெல்ல விலகி பெங்களூரில் செட்டில் ஆனார்.
இந்நிலையில் அவர் கர்ப்பமானார். தலை பிரசவத்திற்கு சென்னையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று அவருக்கு பிரசவ வலி எடுத்ததை அடுத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நேற்று பகல் 11. 30 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள்.
actress meena சென்னை அப்பல்லோ மருத்துவமனை நடிகை மீனா பெண் குழந்தை மீனா baby girl chennai apollo hospital


Click it and Unblock the Notifications