twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது

    By Sudha
    |

    Meena
    பிரபல நடிகை மீனா நேற்று அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மீனா. மீனா என்றால் என்றால் நம் நினைவுக்கு வருவது அவரது அழகான கண்கள் தான்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீனா பெங்களூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் வித்யாசாகர் என்பவரை மணந்தார். பின்னர் நடிப்பில் இருந்து மெல்ல மெல்ல விலகி பெங்களூரில் செட்டில் ஆனார்.

    இந்நிலையில் அவர் கர்ப்பமானார். தலை பிரசவத்திற்கு சென்னையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று அவருக்கு பிரசவ வலி எடுத்ததை அடுத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு நேற்று பகல் 11. 30 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள்.

    English summary
    Popular actress Meena has given birth to a baby girl yesterday in Poonamallee Apollo hospital. She got married to a techie named Vidyasagar and settled in Bangalore. The baby was born at 11. 30 am.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X