புதுமுக ஹீரோக்களுடன் நடிக்கவும் நான் தயார்-பிரியா மணி

By Sudha

Priyamani
முன்னணி ஹீரோக்கள் தான் என்றில்லை, புதுமுக ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்க நான் தயார்தான் என்கிறார் பிரியா மணி.

பருத்தி வீரனுக்கு பிந்தைய பிரியா மணி, கவர்ச்சியின் உச்சத்திற்குப் போய் விட்டார். படத்துக்குப் படம் கவர்ச்சிகரமாக நடிக்க அவர் தவறுவதில்லை. ஏன் என்று கேட்டால், முகம் முழுக்க எண்ணெய் வழியும் பருத்தி வீரன் நாயகியாகவே நான் இன்னும் மக்கள் மனதில் இருக்கிறேன். அதிலிருந்து தனித்து என்னைக் காட்டவே இந்த கவர்ச்சிப் போர்வை என்கிறார்.

இப்படி கவர்ச்சிகரமாக நடித்தாலும், அதற்கு தயக்கமே காட்டாமல் தயாராக இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் தன்னை யாரும் சீண்டுவதில்லை என்று விசனமாக இருக்கிறார் பிரியாமணி. அவரது கையில் இப்போது தமிழ்ப் படம் எதுவுமே இல்லையாம்.

ராவணன் படத்தில் நடித்த சின்ன ரோலைப் பார்த்து இந்தியில் வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால் தமிழில்தான் சற்றும் வாய்ப்புகள் இல்லையாம்.

இதுகுறித்து பிரியா மணி கூறுகையில், நான் புதுமுகங்களுடன் நடிக்கக் கூடத் தயாராகவே இருக்கிறேன். நல்ல கதையாக இருந்தால் போதும். இந்தியில் வாய்ப்புகள் வருகின்றன. பார்த்து தேர்வு செய்து நடிப்பேன்.

சல்மான் கானுடன் நான் நடிக்கவில்லை. அப்படி வந்த செய்திகள் தவறு. அதேபோல பிரியதர்ஷன் படத்திலும் நான் புக் ஆகி பின்னர் நீக்கப்பட்டதாக கூறப்படுவதும் கூட தவறுதான் என்றார் பிரியா மணி.

தமிழில் சுத்தமாக வழித்தெடுத்தது போல வாய்ப்புகள் உள்ளதாலும், பிற மொழிகளிலும் கூட பெரிய அளவில் கையில் படங்கள் இல்லாததாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறைய ஓய்வு கிடைத்ததாம் பிரியாவுக்கு. இதையடுத்து குடும்பத்தோடு அமெரிக்காவுக்குப் போய் வந்தாராம்.

முடிஞ்சா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து என இன்னும் கூட நிறைய நாடுகளை சுற்றிப் பார்த்து விட்டு வந்திருக்கலாமே. அதற்குள் ஏதாவது படம் வந்து விடாதா...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X