»   »  பொருத்தமில்லாத டிரஸ்ஸைத் தைத்த டிசைனரை சாடி வெளியேற்றிய ராணி முகர்ஜி

பொருத்தமில்லாத டிரஸ்ஸைத் தைத்த டிசைனரை சாடி வெளியேற்றிய ராணி முகர்ஜி

By Sudha
Subscribe to Oneindia Tamil
Rani Mukherjee
பொருத்தமே இல்லாமல் டிரஸ் தைத்துக் கொடுத்த தனது புதிய டிரஸ் டிசைனரை பல பேர் முன்னிலையில் கடுமையாக சாடிய நடிகை ராணி முகர்ஜி, அவரை அந்த வேலையிலிருந்தும் அந்த இடத்திலேயே நீக்கினார்.

ராணி முகர்ஜி திட்டி தன்னை வெளியேற்றியதால் வருத்தமடைந்த அந்த டிசைனர் அழுதபடி வெளியேறினார்.

சமீபத்தில் மும்பையில், பிக் ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ராணி முகர்ஜி கலந்து கொண்டு ஆடினார். ஆனால் அவர் முழு மனதுடன் ஆட முடியவில்லை. காரணம், அவர் அணிந்திருந்த டிரஸ். எப்போது கழன்று விழுமோ என்ற நிலையில் அது இருந்தது.

இதனால் கடுப்பான ராணி பாதியிலேயே ஆட்டத்தை நிறுத்தி விட்டு வெளியேறினார். மேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த தனது டிசைனரிடம் வேகமாக சென்ற அவர், டிசைனரை கடுமையாக திட்டினார். பின்னர் இனிமேல் என்னிடம் உங்களுக்கு எந்த வேலையும் இல்லை, நீங்கள் போகலாம் என்று காட்டமாக கூறி விட்டு நடையைக் கட்டினார்.

ஏராளமான பேர் நின்றிருந்த அந்த இடத்தில் ராணி தன்னைத் திட்டியதால் பெரும் வருத்தமடைந்த அந்த டிசைனர் பெண்மணி அழுதபடி வெளியேறினார்.

ராணி வழக்கமாக சபயசாச்சி முகர்ஜி அல்லது நீத்து லல்லாவிடம்தான் டிரஸ் தைக்கக் கொடுப்பார். ஆனால் இந்த முறை வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நினைத்து புதிய டிசைனரிடம் தனது டிரஸ்ஸைக் கொடுத்திருந்தார். ஆனால் அது சொதப்பி விட்டது. இதனால்தான் கோபமடைந்து விட்டார்.

டிசைனரை நீக்கியதற்காக தான் வருத்தப்படவில்லை என்று கூறியுள்ள ராணி, அவரது சொதப்பலால் எனக்கு பெரும் அவமானமாகி விட்டது. எனவேதான் நீக்கினேன், அதில் ஒன்றும் தவறில்லை என்று கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Actress Rani Mukherjee has fired her newly found dress maker for ill-fitted ghagra, stitched by the designer. The actress vented her anger on the girl in front of a large gathering which included media personnel as well. Rani had to leave the stage midway through her performance many a times because she felt as if the skirt was slipping down her waist while she was dancing, at the Big Star Entertainment Awards in Mumbai.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more