சார்மிக்குத் தயாராகும் 'சிங்'கம்!

தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் ஹிட் ஆனவர் சார்மி. கவர்ச்சியை முக்கிய முதலீடாக வைத்து தெலுங்கில் தேட்டையை நடத்திக் கொண்டிருக்கும் சார்மிக்கு திடீரென வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த மாப்பிள்ளை வேட்டையால் சார்மி சற்றே அப்செட் ஆகியுள்ளாராம். ஆனாலும் பெற்றோர் படு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். சார்மி சீக்கிய இநத்தைச் சேர்ந்தவர் என்பதால் நல்ல இளம் சீக்கியராக தேடி வருகிறார்களாம்.
இந்த வேகத்திற்கு என்ன காரணம் என்று டோலிவுட்டில் கூறுகிறார்கள் என்றார், சார்மியுடன் ஒரு வாலிபர் அடிக்கடி தென்படுகிறாராம். அவர் குறித்து வீட்டினர் கேட்டால், காதலிக்கவில்லை,ஜஸ்ட் நட்புதான் என்கிறாராம் சார்மி.
ஆனால் பெற்றோர் இதை நம்ப தயாராக இல்லையாம். எதற்கு வம்பு என்று நினைத்துத்தான் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனராம்.
Comments


Click it and Unblock the Notifications