வரலாற்றுப் படத்தில் சினேகா

சகலவிதமான கேரக்டர்களில் சர்வ சாதாரணமாக நடித்துக் கலக்கும் சினேகா வரலாற்றுக் கதை ஒன்றில் நடிக்கப் போகிறார், இங்கல்ல, தெலுங்கில்.
இப்படி வித்தியாசமான பாத்திரத்தில் சினேகா நடிப்பது புதிதல்ல. ஏற்கனவே ஸ்ரீராமதாஸு என்ற பக்திப் படத்தில் நடித்துள்ளார். அதில் பக்த ராமதாஸ் வேடத்தில் வந்தவர் நாகாகர்ஜூனா. இப்போது மீண்டு் நாகார்ஜுனாவுடன் இணைந்தே நடிக்கவிருக்கிறார் சினேகா.
இந்தப் படத்திற்கு இப்போதைக்கு ராஜண்ணா என்று பெயர் வைத்துள்ளனர். இருந்தாலும் அது மாறுமாம். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயேந்திர பிரசாத் இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தில் சினேகாவுக்கு அட்டகாசமான வேடம் என்கிறார்கள். கிட்டத்தட்ட அருந்ததி படத்தின் மூலம் அனுஷ்கா விஸ்வரூபம் எடுத்தது போல இந்தப் படத்தில் சினேகாவுக்கு நல்ல பெயர் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.
More from Filmibeat
actress sneha நடிகை சினேகா ராஜண்ணா வரலாற்றுப் படத்தில் சினேகா rajanna sneha in telugu historical movie


Click it and Unblock the Notifications











