'அப்பளராஜு' ஸ்வாதி!
சுப்ரமணியபுரம் பட நாயகி ஸ்வாதி தெலுங்கில் ஒரு புதிய படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கப் போகிறார். படத்தை இயக்கப் போவது ராம் கோபால் வர்மா. படத்தின் பெயர் அப்பளராஜு.
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு நேரடித் தெலுங்குப் படத்தை இயக்க வந்துள்ளார் வர்மா. இவர் ஒரு தீவிர ஸ்ரீதேவி ரசிகர். ஸ்ரீதேவிக்கு கல்யாணம் என்று வந்த செய்தியைக் கேட்டு தனிமையில் தேம்பித் தேம்பி அழுதாராம். அந்த அளவுக்கு ஸ்ரீதேவி வெறியரும் கூட.
நீண்ட நாள் கழித்து தெலுங்கில் தான் இயக்கப் போகும் படத்தை ஸ்ரீதேவிதான் தொடங்கி வைக்க வேண்டும் என்று விரும்பி அவரை அணுக, அவரும் உடனே ஓ.கே. சொல்லி விட்டார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கதா, ஸ்கிரீன்பிளே, டைரக்ஷன் அப்பளராஜு என்ற வர்மாவின் இந்தப் புதிய படத்தை ஸ்ரீதேவி தொடங்கி வைத்து சிறப்பித்தார். நாகார்ஜூனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இப்படத்தில் ஸ்வாதி நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுனில் வருகிறார். சாதாரண ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு சினிமா இயக்குநராகும் கனவு வருகிறது. இதை நனவாக்க ஹைதராபாத் கிளம்பி வருகிறான். அங்கு அவன் சந்திக்கும் சவால்கள், கடைசியில் பெறும் வெற்றி ஆகியவைதான் படத்தின் கதையாம்.
தமிழுக்கும் ஏற்ற கதையாகத் தெரிகிறது அல்லவா, கவலைப்பட வேண்டாம் நிச்சயம் யாராவது ரீமேக் செய்வார்கள்!


Click it and Unblock the Notifications











