வயசுப் பிரச்சினை .. பிபாஷா பாய்ச்சல்

கவர்ச்சியில் புதுப் புது சரக்கை இறக்கி பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்துக் கொண்டிருக்கும் பிபாஷா, மூத்த நடிகர்கள் இளம் வயது நடிகைகளுடன் ஜோடியாக நடிப்பதையும், அதே இளம் நடிகைகள் மூத்த நடிகர்களுடன் நடித்தால் மட்டும் கிண்டலடிப்பதையும் சாடியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாலிவுட் ஹீரோக்களை புஷ்பிக்கும் ஒரு திரையுலகம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் மீடியாக்கள் சற்று புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
40 வயதுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் தங்களை விட இளம் வயது நடிகைகளுடன் ஜோடி சேருவதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் இளம் வயது நடிகைகள் தங்களை விட இளம் வயது ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டால் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி விடுகிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது என்றார் பிபாஷா.
பச்னா ஆயே ஹசீனோ படத்தில் தன்னை விட வயது குறைந்த ரன்பீர் கபூர், பிரீஸ் படத்தில் நிதின் முகேஷுடன் பிபாஷா இணைந்து நடிப்பது குறித்து கேட்டதற்குத்தான் பிபாஷா இப்படிப் பொறிந்து விட்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், நான் மாடலிங் துறையிலிருந்து வந்தவள் என்பதால் என்னிடம் மேற்கத்திய பாணி இருக்கிறது. அதேசமயம், எனது இந்திய முகம், இந்தித் துறைக்கும் பொருத்தமானதாகவே இருக்கிறது.
ரன்பீர் சிங் நடிக்க வருவதற்கு முன்பே அதற்கேற்ப நல்ல பயிற்சியைப் பெற்றுள்ளார். உதவி இயக்குநராகவும் இருந்துள்ளார். ஆனால் நான் அப்படி இல்லை. நடிக்க வந்த பிறகுதான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன்.
திரைக்கு பின்னாலும் நல்ல மனிதராக இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் இது ஆணாதிக்க உலகம். எனவே பெண்களுக்கென்று குறிப்பிட்ட எல்லைதான் இருக்கிறது. அதற்கு அவர்களால் எதிர்பார்க்கவும் முடியாது, எதையும் கேட்கவும் முடியாது என்கிறார் பிபாஷா.
அவர் இதுவரை நடித்த படங்கள் குறித்த கேள்விக்கு, நான் நடித்த படங்களிலேயே 2வதாக நடித்த ராஸ் படம்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம், அந்தப் படத்திற்குப் பின்னர் வேறு எந்தப் படமும் கோல்டன் ஜூபிளியை கண்டதில்லை. எனவே ராஸ் எனக்கு விசேஷமானது என்றார் பிபாஷா.


Click it and Unblock the Notifications











