இனி முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி போட அஞ்சலி முடிவு
இதுவரை புதுமுக நாயகர்களுடன் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த அஞ்சலி இனிமேல் பிரபலமான நாயகர்களுடன் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த தெலுங்குப் பெண் அஞ்சலி. முதல் படம் அவருக்கு நல்ல நடிகையாக அடையாளம் காட்டினாலும் கூட ஸ்டாராக மாற்றவில்லை. ஆனால் அங்காடித் தெரு படம் அவரை பெரிய உயரத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டது.
தற்போது மகாராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி. இதில் மாடர்ன் பெண்ணாக வருகிறாராம். இவரது வேடம் அனைவரையும் கவரும் என்கிறார் படத்தின் இயக்குநர் மனோகர். படத்தில் அஞ்சலிக்கு ஜோடி போட்டிருப்பது புதுமுகம் சத்யா.
அங்காடித் தெரு மூலம் கிடைத்த புகழை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக சிரமப்படுகிறாராம் அஞ்சலி. காரணம், அப்படத்திற்கு முன்பு அவர் ஒப்புக் கொண்ட சில சின்னப் படங்கள் என்கிறார்கள். அதில் புதுமுக நடிகர்கள், சில இயக்குநர்களுக்கு ஜோடியாக ஒப்பந்தமாயிருந்தார் அஞ்சலி. அதிலிருந்து விலக முடியாத நிலை.
இது அவருக்கு பாதகத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது. தற்போது அதிலிருந்து மீண்டு விட்டாராம் அஞ்சலி. ஒப்புக் கொண்ட படங்களை சமர்த்தாக முடித்துக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இனிமேல் புது அஞ்சலியை ரசிகர்கள் பார்க்கலாம், நடிப்புக்கும், கவர்ச்சிக்கும் சரியான முக்கியத்துவம் கொடுத்து நடிக்கப் போகிறேன். நல்ல கதைகளில் மட்டுமே நடிக்கப் போகிறேன், முக்கியமாக முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடியாக வரப் போகிறேன் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார் அஞ்சலி.
நடிக்க அஞ்சலி ரெடி என்றால், ரசிக்க ரசிகர்களும் தயார்தான்...


Click it and Unblock the Notifications











