கமல் படத்துக்காக சென்னை வந்த அசின்

கமல்ஹாசன் நடிக்கும் '19 ஸ்டெப்ஸ்' படத்தில் நடிப்பதற்காக அவர் சென்னைக்கு வந்துள்ளார்.
குறுகிய காலத்தில் தமிழின் நம்பர் ஒன் நாயகியாக உயர்ந்தவர் அசின். ஆனால் அவருக்கு இந்தியில் அமீர்கானுடன் கஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு வர, இந்த 'நம்பர் ஒன்னை'த் தூக்கி பரணில் போட்டுவிட்டு மும்பைக்கு பறந்தார்.
கஜினி ஓடிய ஓட்டம், அவரை நிரந்தரமாக பாலிவுட்டிலேயே இருத்தி விட்டது. இப்போது மும்பையின் முக்கிய பகுதியில் பெரிய பங்களா வாங்கி செட்டிலாகிவிட்டார் அசின். கைவசம் 3 பெரிய இந்தி புராஜக்ட்டுகள்.
அவர் கஜினியில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஒப்பந்தமான கமல் நடிக்கும் '19 ஸ்டெப்ஸ்' படம். ஜப்பானின் தாடனோ அஸனோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகத்தான் அசின் நடிக்கிறார். கமல் இதில் கிட்டத்தட்ட கெளரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதே பொருந்தும்.
இந்தப் படத்தில் களறிச் சண்டை வீராங்கணையாக நடிக்கும் அசின், படத்துக்காக வெகு சிரமப்பட்டு அந்தக் கலையைக் கற்றுக் கொண்டாராம். படப்பிடிப்புக்காக சென்னை வந்தவர், தன் பழைய நண்பர்களிடம் நீண்டநேரம் ஜாலியாகப் பேசி மகிழ்ந்தாராம்.
முருகதாஸின் அடுத்த படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் அசின் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











