பெயிண்டிங் கண்காட்சி நடத்தும் அசின்!

By Staff

Asin
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் அசின்.

இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததால், தமிழ் உள்ளிட்ட தென்மாநில மொழிப் படங்களை புறக்கணித்து இந்திக்குப் போனார்.

அவர் அமீர்கானுடன் நடித்த கஜினி படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. வசூலை வாரிக் குவிக்க, அசினுக்கு வரிசையாக பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் மட்டும் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால் இந்தப் படம் படுதோல்வியடைய, அதுவரை அசின் வீட்டில் அவரது கால்ஷீட்டுக்கு தவம் கிடந்த தயாரிப்பாளர்கள் மாயமாகினர்.

எனவே பட வாய்ப்புகள் இல்லாததால் பெயிண்டிங் செய்வதில் பொழுதைக் கழித்தார் அசின். பெயின்டிங் செய்யும் நேரம் போக, மீதி நேரங்களில் தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிப் படங்களில் வாய்ப்பு கேட்டு வருகிறார். இதன் பலனாக 4 புதிய தமிழ்ப் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவற்றில் இரண்டு படங்கள் விஜய் நடிக்கிறார்.

ஆனால் இந்தப் படங்கள் உடனடியாகத் துவங்கும் நிலையில் இல்லையாம். இன்னும் நான்கைந்து மாதங்களாவது ஆகும் என்பதால், தான் இதுவரை வரைந்து தள்ளிய ஓவியங்களை வைத்து தனி கண்காட்சி நடத்த முடிவு செய்துள்ளார் அசின்.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளாராம் அசின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X