மறுத்துவி்ட்ட பாரதி

பல முன்னணி நடிகைகளும் நடிக்க மறுத்து வந்த நிலையில், தானாக முன்வந்து ஏற்று பாரதி நடித்துக் கொடுத்த படம் அம்முவாகிய நான். இப்படத்தில் அவரது ஆபாசம் இல்லாத கிளாமரும், அழகான நடிப்பும் பாரதிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
அடுத்து பாரதி நடித்து சமீபத்தில் வெளியான நெஞ்சத்தைக் கிள்ளாதே படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இந்த இரு படங்களும் கொடுத்த வெற்றியால் பாரதி மிகத் தெளிவாகி விட்டார். நம்பிக்கையும் கூடி விட்டது. இனி வெற்றிப் படிகளிலிருந்து இறங்காமல் தொடர்ந்து உச்சத்திற்குப் போவது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்த விட்டார்.
இந்த நிலையில்தான் அம்முவாகிய நான் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க பாரதிக்கு அழைப்பு வந்தது. ஆனால் கண்ணை மூடிக் கொண்டு வேண்டாம் என்று சொல்லி விட்டாராம் பாரதி.
தெலுங்கிலும் இதே ரோலில் நடித்தால் நிச்சயம் அது தேவையில்லாத முத்திரைக்குள் தன்னைத் தள்ளி விட்டு விடும். இப்படிப்பட்ட ரோல்களில் மட்டுமே அம்மு நடிப்பார் போல என்ற எண்ணம் வந்து விடும்.
நான் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க ஆவலாக உள்ளேன். எனவே ஒரே மாதிரியான ரோல்களில் திரும்பத் திரும்ப நடிக்க எனக்கு விருப்பமில்லை என்கிறார் பாரதி.
பாரதிக்கு எது நல்லது, எது தவறு என்ற தெளிவு வந்து விட்டது. நிச்சயம் அவர் கோலிவுட்டில் அவர் வெற்றி பெற்று விடுவார் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications











