மீரா போய் சாயா!

சின்னத்திரை மர்ம சீரியல்கள் புகழ் நாகா, பெரிய திரைக்கு வந்துள்ளார். ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அனந்தபுரத்து வீடு படத்தை அவர் இயக்குகிறார். இதுவும் நாகா டிரேட் மார்க் திகில் கதைதான்.
படத்தின் நாயகியாக மீரா ஜாஸ்மின் புக் ஆகியிருந்தார். நல்ல கதை என்பதால் மீரா ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் நாகாவின் செயல்பாடுகள் தனக்கு சரிப்பட்டு வராததால் படத்திலிருந்து விலகி விட்டார்.
ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும் என மீராவுக்கு, புதுமுக நடிகைக்கு சொல்லித் தருவதைப் போல சொல்லிக் கொடுத்தாராம் நாகா. அது போக காட்சியை படமாக்குவதற்கு முன்பு ரிகர்சலுக்கும் வற்புறுத்தியுள்ளார்.
சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்ற தனக்கு இது அவமானம் என்று நினைத்த மீரா, படத்திலிருந்து விலகிக் கொள்வதாக கூறி விட்டாராம்.
இதையடுத்து சாயாசிங்கை நாயகியாக்கி படப்பிடிப்பைத் தொடர்ந்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











