குத்து நாயகியான புளோரா

குத்துப் பாட்டு ஸ்பெஷலிட்டான முமைத்கான் இப்போது ஹீரோயினாகி விட்டார். தெலுங்கில் அவர் ஹீரோயினாக நடித்து ஒரு படம் வெளியாகி, வேகமாக தியேட்டரை விட்டும் போய் விட்டது. இருந்தாலும் தொடர்ந்து ஹீரோயினாக, கதைப்பற்று பிளஸ் சதைப்பற்றுள்ள படங்களில்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்து வருகிறார் முமைத் கான்.
இந்த நிலையில் ஹீரோயினாக அறிமுகமாகி, இடையில் போலி விசா சிக்கலில் மாட்டி சிறை சென்று மீண்டு, மீண்டும் நடிக்க வந்துள்ள புளோரா குத்துப் பாட்டு ராணியாக மாறி வருகிறார்.
ரஜினியின் குசேலன் படத்தில் தலைகாட்டிய அவர் இப்போது கருணாஸ் நாயகனாக நடிக்கும் திண்டுக்கல் சாரதி படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு கும்மாள ஆட்டம் போட்டுள்ளாராம்.
திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பெரிய பூட்டு
எனக்கு உன் கிட்டதான் திறந்து பார்க்க கள்ளச்சாவி இருக்கு என்று தொடங்குகிறதாம் அந்தப் பாட்டு.
கருணாஸ் மது போதையில், புளோராவுடன் ஆடுவது போல இந்தப் பாட்டை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவசண்முகன்.
இந்தப் பாட்டு ஹிட் ஆனால் தொடர்ந்து குத்துப்பாட்டுக்களுக்கு ஆடிக் கலக்கும் திட்டம் உள்ளதாம் புளோராவுக்கு.
இருந்தால் இந்த மடம், இல்லாட்டி அந்த மடம்!.


Click it and Unblock the Notifications











