ஷாரூக் மனைவியை கொல்வேன்-வித்யா பாலனின் 'வெறி'!

சமீபத்தில் ஷாஜித் கான் நடத்தும் 'ஷாஜித் சூப்பர் ஸ்டார்' எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வித்யா பாலன் பங்கேற்றார்.
அப்போது, அவரிடம், உங்களுக்கு விருப்பமான நடிகர் யார் என்று கேட்கப் பட்டது. அவரோ ஒரு நொடி கூடத் தமாதிக்காமல், ஷாரூக் கான் ஒருவர்தான் எனக்குப் பிடித்தவர் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
'ஷாரூக்கான் மீது உயிரையே வைத்திருக்கிறேன். அது என்னமோ தெரியவில்லை, அவரது புகைப்படத்தைப் பார்க்காமல் கூட என்னால் இருக்க முடியாது. இதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை...', வித்யா இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்த ஷாஜித், 'வித்யா பார்த்துப் பேசுங்க, இந்த நிகழ்ச்சியை ஷாரூக்கின் மனைவி கௌரி கான் பார்த்துக் கொண்டிருக்கிறார்', என்றார்.
உடனே, 'பார்க்கட்டுமே... ஷாரூக் எனக்குக் கிடைப்பாரென்றால், கௌரியைக் கொல்லக் கூடத் தயங்க மாட்டேன்' (வில்லி மாதிரி சிரித்தபடி!) என்றார்.
ஒரு கணம் ஆடிப் போய்விட்டார் ஷாஜித்கான்.
நிச்சயம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஷாரூக்கானும் ஆடித்தான் போயிருப்பார்!


Click it and Unblock the Notifications











