காஜலின் வருத்தம்

By Staff

Kajal Agarwal
தென்னிந்திய மொழிப் படங்களில் படு வேகமாக பிசியாகி வரும் காஜல் அகர்வால், தான் முதன்முதலில் நடித்த பொம்மலாட்டம் இன்னும் வெளியாகாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறதாம்.

பாரதிராஜாவின் பொம்மலாட்டம்தான் காஜலின் முதல் படம். ஆனால் அது இன்னும் வெளியாகவே இல்லை. அதற்குள் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் முனைப்புடன் பிசியாகி விட்டார் காஜல்.

பரத்துடன் அவர் ஜோடி போட்ட பழனி சூப்பர் ஹிட் படமாகவே காஜலுக்கு தமிழில் ஏகப்பட்ட கிராக்கி. அதேபோல தெலுங்கிலும் அவர் பிசியாக உள்ளார். தொடர்ந்து கன்னடத்திலும் அவர் என்ட்ரி கொடுக்கிறார்.

கன்னடத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக ஏ.கே. 97 என்ற படத்தில் ஜோடியாக நடிக்கிறாராம் காஜல்.

இப்படி ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு, கன்னடம் என பிசியாகியுள்ளதால் படு குஷியாக இருக்கிறதாம் காஜலுக்கு. அப்படியே இந்தியிலும் பிக்கப் ஆகி விட்டால் தேசிய நடிகை பெருமை கிடைத்து விடுமே என்ற பூரிப்பும் இருக்கிறதாம் காஜலிடம்.

ஆனால் காஜலுக்கு உள்ள ஒரே வருத்தம், தான் முதன் முதலில் தலை காட்டிய பொம்மலாட்டம் இன்னும் வெளி வராமல் இருக்கிறதே என்பதுதான் அந்தப் பெரிய கவலை.

என்ன செய்வது, பொம்மலாட்டத்திற்கு என்ன ஊசலாட்டமோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X