மேகாவின் 'உயர' காதல்!!

By Staff

Megha Nair
குறுகிய காலத்தில் 3 படங்களில் நடித்து விட்ட கேரளத்து வண்ணத்துப் பூச்சி மேகா நாயருக்கு தனது உயரத்தின் மீது நிறையக் காதலாம். இந்த உயரம்தான் என்னை பெரிய உயரத்திற்குக் கொண்டு போகப் போவதாக பூரிப்புடன் கூறுகிறார்.

மேகாவின் முதல் படம் தொடக்கம். 2வது படம் பசுபதி மே.பா. ராசக்காபாளையம். அதில் முண்டு கட்டி கேரளத்து கிளாரம் கன்னியாக நடித்திருந்தார். மூன்றாவது படத்தில் ஹீரோயினாக புரமோஷன் வாங்கினார். சத்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் உயரமான நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி கொஞ்சம் குறைச்சல்தான். இருக்கிற ஹீரோக்களிலேயே ரொம்ப உயரமானவர் சத்யராஜ்தான். அதேபோல நமீதாதான் இப்போதைய நடிகைகளிலேயே மிகவும் உயரமானவர்.

திரிஷா, நயனதாரா, பிரியா மணி ஆகியோரும் கூட நல்ல உயரம்தான். ஆனால் பிரமாண்டமான அரபுக் குதிரை போல உயரத்திலும், வெயிட்டிலும் கலக்கலாக இருப்பவர் நமீதா மட்டுமே.

இப்போது நமீதாவுக்கு நல்ல போட்டியாக உருவாகியிருக்கிறார் மேகா நாயர். உயரத்தைப் பொறுத்தவரை நமீதாவுக்கு அடுத்து மேகாதான் உயரமான நடிகையாம்.

இந்தப் புள்ளி விவரத் தகவலைக் கேட்டு மேகா குஷியாகி விட்டாராம். எனக்கு எப்போது நான் உயரமாக இருப்பது குறித்து வருத்தமே ஏற்பட்டதில்லை. எனது தோழிகளும் கூட உனது உயரம்தான் உனக்கு அழகு என்று கூறுவார்கள்.

சத்யராஜ் சார் நல்ல உயரமானவர். அவருக்கு ஜோடியாக தங்கம் படத்தில் நான் நடித்தபோது, நல்ல ஜோடிப் பொருத்தம் என்றார்கள். அதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன்.

உயரமாக இருப்பதால் மற்ற ஹீரோக்களோடு சேர்ந்து நடிக்க முடியாது என்று கூறுவதில் உண்மையில்லை. இப்போது உள்ள மற்ற ஹீரோக்களும் கூட நல்ல உயரத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்குதான் எனது உயரமும் உள்ளது.

உயரமான உடல் வாகு உடையவர்களுக்குத்தான் கிளாமர் ரோல்கள் பொருத்தமாக இருக்கும். எனக்கு கிளாமரும் நன்றாக வரும், நடிக்கவும் நன்றாகத் தெரியும். இந்த உயரம்தான் என்னை பெரிய உயரத்திற்குக் கொண்டு போகப் போகிறது என்று அழகாக சிரிக்கிறார் மேகா.

கிளாமர் கலந்த நடிப்பு என இரட்டை குதிரை சவாரியைத் தொடரப் போகிறாராம் மேகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X