மோனிகாவின் அ ஆ இ ஈ!

சிறுமியாக சில படங்களில் வந்து போன மோனிகா, முதல் முறையாக தனி ஹீரோயினாக நடித்து வரும் படம் சிலந்தி. படத்தில் மோனிகாவை உரித்த கோழியாக்கி மிதமிஞ்சிய அளவுக்கு கவர்ச்சியில் நனைய விட்டு படம் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏவிஎம்மின் அ ஆ இ ஈ என்ற வித்தியாசமான படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் மோனிகா.
ஏவி.எம். குமரன் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் நவ்தீப். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நவ்தீப் நாயகனாக நடிக்கும் படம் இது.
தெலுங்கில் ஓடிய சந்தமாமா என்ற படத்தைத்தான் அ ஆ இ ஈ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். படம் முழுக்க காமெடி அதிகமாக இருக்குமாம். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இதை உருவாக்கவுள்ளனராம்.
படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். பிரபுதேவாவின் நடிப்பில் உருவான விஐபி படத்தை இயக்கியவரான சபாபதி இப்படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.
சிலந்தியில் கவர்ச்சிப் பாடம் படித்து வரும் மோனிகா, இந்தப் படத்தில் என்ன பாடம் கற்பிக்கப் போகிறாரோ?


Click it and Unblock the Notifications











