மர்மயோகியில் முமைத்கான்!

தமிழிலும், தெலுங்கிலும் 'பெப்பி கேர்ள்' ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் முமைத்கான். இப்போது தனி நாயகியாகவும் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்துள்ளார். தெலுங்கில் ஹீரோயினாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் முமைத்துக்கு எதிர்பாராத வாய்ப்பு வந்துள்ளது.
அது, மர்மயோகியில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புதான். இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாராம் முமைத்கான். தசாவதாரத்தில் மல்லிகா ஷெராவத்துக்குக் கிடைத்தது போன்ற கேரக்டராம் முமைத்துக்கு.
தற்போது கந்தசாமியில் நடிப்பிலும், குத்துப் பாட்டிலும் கலக்கியுள்ளார் முமைத்கான். இந்த குத்துப் பாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகரமாக தோன்றியிருக்கிறாராம்.
இதுதவிர தமிழில் ஒரு படத்தில் நாயகியாகவும் நடிக்கப் போகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
Comments


Click it and Unblock the Notifications