கல்யாணம் ... நமீதா வருத்தம்!

கவர்ச்சி குதுப்மினார் நமீதா, எந்தக் கேள்வி கேட்டாலும் டான் டான் என்று பதில் சொல்லக் கூடியவர். பத்திரிக்கையாளர்களிடம் படு கேஷுவலாக பேசக் கூடியவர். அப்படிப்பட்டவரிடம், பத்திரிக்கையாளர்கள் குறித்து ஒரே ஒரு வருத்தம் உண்டாம்.
அது என்ன? கல்யாணம் குறித்த கேள்விகள்தான். சமீபத்தில் ஒரு பேட்டியின்போது ஒரு நிருபர் கல்யாணம் குறித்து கேட்டபோது பதில் சொல்லாமல் புன்னகைத்து நழுவினார் நமீதா.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கும், ஒரு கேமராமேனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததாக கூறப்பட்டது. அந்த நெருக்கம் பின்னர் கசந்து போய் அவரை விட்டு விலகினார் நமீதா என்றும் கூறப்பட்டது. அதன் பின்னர்தான் நமீதா தனது திரைப்படத் தொழில் பக்கம் முழுக் கவனத்தையும் திருப்பி மிகப் பெரிய கவர்ச்சி கதாநாயகியானார்.
சமீபத்தில் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இதுபோன்ற கேள்விகளுக்கு நான் முக்கியத்துவம் தர விரும்பவில்லை.
எனது திருமணம் குறித்து ஆளாளுக்கு எழுதுகிறார்கள். அவருடன் கல்யாணம், இவருடன் கல்யாணம் என்கிறார்கள். இதெல்லாம் என்னை காயப்படுத்துகிறது. இருப்பினும் மீடியாக்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. அவர்கள் எனது நண்பர்கள். அவர்கள் எழுதுவதை நான் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறேன் என்கிறார் நமீதா.
இந்த நிலையில் தற்போது நடித்து வரும் ஜெகன்மோகினி படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறாராம் நமீதா. பெரும் பொருட் செலவில் படத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதை கோலிவுட்டே ஆச்சரியத்துடன் பார்க்கிறது.
ஹீரோயின் சப்ஜெக்ட் படத்துக்கு இவ்வளவு செல்வு செய்வது கோலிவுட் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாம். படம் முழுக்க மசாலா படு அதிகமாக இருப்பதாலும், நமீதாவின் படம் என்பதாலும் பணத்தை தண்ணீராக செலவு செய்து கொண்டிருக்கிறார்களாம்.
சட்டியில் இருக்கிறது, அகப்பையில் வரும் என்ற நம்பிக்கைதான்!


Click it and Unblock the Notifications











