கவர்ச்சியைத் தொடர்வேன் -நயன்

அஜீத் நடித்துள்ள ஏகன் படத்தில் ஆபாசமாக நடித்துள்ளதாக நயன்தாரா மீது திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நயன்தாராவிடம் நேற்று கருத்துக் கேட்கப்பட்ட போது, தனக்கு இந்த வழக்கு குறித்து எதுவும் தெரியாது என்றார்.
இந்நிலையில் இன்று அந்த வழக்கு குறித்து நம்மிடம் பேசினார். அவர் கூறியதாவது:
கவர்ச்சி வேறு, ஆபாசம் வேறு. கதைக்குத் தேவையான கவர்ச்சியை சென்சாரே அனுமதிக்கிறது. ஆனால் ஆபாசம் ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை.
என்மீது வழக்குத் தொடர்ந்துள்ளவர்களுக்கு இதுகூடவா தெரியாது. நான் ஒருபோதும் ஆபாசக் காட்சிகளில் நடித்ததில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் நான் இல்லை. இந்த வழக்கின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று நான் யோசிக்கவில்லை. யாராக இருந்தால் என்ன... நியாயம் இருக்கிறதல்லவா...
என் பக்கம் எந்தத் தவறும் இல்லை. காட்சிக்குத் தேவை என்றால் தொடர்ந்து கவர்ச்சி காட்டுவேன்.
லிங்குசாமியின் படம் குறித்து இப்போது எதுவும் பேச விரும்பவில்லை. என்னவாக இருந்தாலும் மீடியா மூலம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக சொல்லட்டும், என்றார் நயனதாரா.


Click it and Unblock the Notifications











